oferrceylon
ORGANISATION FOR ELANGAI REFUGEES REHABILITATION

Page Not Found.

 

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் ஆதரவூடன் கிளிநொச்சி மாவட்டத்தில் குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக நடாத்தப்பட்ட விசேட நடமாடும் சேவையில் கலந்துகொண்டு குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்தவர்களில் இலங்கை குடியுரிமைச் சான்று கிடைக்கப்பெற்ற 32 மாணவர்களுக்கு இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் யாழ்ப்பாண கள அலுவலகத்தில் கழக தலைவி செல்வி.சி.சூரியகுமாரி அவர்களினால் வழங்கப்பட்டது.

இலங்கை ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் வெளிவிவகார அமைச்சுடன் மேற்கொண்ட தொடர் ஆதரவு திரட்டல் செயற்பாட்டின் ஊடாக இந்நடமாடும் சேவையினை இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சானது கிளிநொச்சி மாவட்டதில் இவ்வாண்டின் யூலை மாதத்தில் நடத்தியிருந்தது. தாயகம் திரும்பிய மக்கள் தங்களது குடியுரிமையினைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு சென்று விண்ணப்பிப்பதில் காணப்பட்ட இடர்பாடுகளினால் பல தாயகம் திரும்பிய மக்கள் தங்களது குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிப்பதில் தேக்க நிலை காணப்பட்டது. இதனை கருத்திற்கொண்டு கழகத்தின் அனுசரணையுடன்  நடாத்தப்பட்ட நடமாடும் சேவையின் மூலம் தாயகம் திரும்பிய மக்கள் இலகுவானமுறையில் தங்களது குடியுரிமைக்கு விண்ணப்பித்துக்கொள்ள முடிந்தது.

2018ல் பாவானிசாகர் முகாமிலிருந்து நாடு திரும்பி இரண்டு பிள்ளைகளின் குடியுரிமைச் சான்றிதழினைப் பெற்றுக்கொண்ட வேலணைப் பிரதேசத்தினைச் சேர்ந்த திருமதி.சசிக்குமார் மைதிலி அவர்கள் தனது பிள்ளைகளின் குடியுரிமைச் சான்றிதழினைப் பெற்றுக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் “சொந்த நாடு திரும்பிய நிலையில் பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கச் சென்றபோது பாடசாலை அதிபரினால் பிள்ளையின் பிறப்பு சான்றிதழ் கேட்கப்பட்டது. ஒபர் நிறுவனத்தின் ஆதரவூடன் பிள்ளைகளுக்கான ஆவணங்கள் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் கொழும்பு சென்று பெறவேண்டிய ஆவணத்தை கிளிநொச்சியில் பெற முடிந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.” எனத் தெரிவித்தார்.

 

 

Style Switcher

12 Predefined Color Skins Top Bar Color Layout Style Patterns for Boxed Version